in

தேமுதிக மாவட்ட செயலாளர் முதல் ஆலோசனைக் கூட்டம்

தேமுதிக மாவட்ட செயலாளர் முதல் ஆலோசனைக் கூட்டம்

 

தேமுதிக மாவட்ட செயலாளர் முதல் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட புதிய தேமுதிக செயலாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.

தேமுதிக மாவட்ட அவை தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர் பண்ணை சொ.பாலு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக கேப்டன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்பு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வருகின்ற 23ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெறும் தேமுதிக மேதின ஊர்வலம் பிரமாண்டமாக நடத்துவது குறித்தும், ஆயிரத்துக்கு மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வதை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட பொருளாளர் ராசி. மதிவாணன் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜகுமார், சாரங்கபாணி,கார்த்திகேயன் உள்ளிட்ட பொதுக்குழு செயற்குழு மற்றும் ஒன்றிய நகர பேரூராட்சி செயலாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

What do you think?

OTT விற்பனையில் சாதனை படைத்த குபேரா

வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி