in

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியை காண தவறிய அர்ஜுன்..னுக்கு’₹50,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு


Watch – YouTube Click

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியை காண தவறிய அர்ஜுன்..னுக்கு’₹50,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியின் தவறான நிர்வாகத்திற்காக, ACTC ₹50,000 இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கே.ஆர். அர்ஜுன் தாக்கல் செய்த மனுவில், ACTC Events, Big Tree Entertainment மற்றும் AR. Rahman ஆகியோர் இந்த நிகழ்வை அலட்சியமாகவும் நியாயமற்ற முறையில் நடத்தியதாக, குற்றம்சாற்றியுள்ளார்.

ஆகஸ்ட் 12, 2024 அன்று நடைபெறவிருந்த இந்த நிகழ்வு பின்னர் செப்டம்பர் 10, 2024 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

நிறுவனம் நிகழ்வை ஏற்பாடு செய்வதில் குளறுபடி நடந்தால் வாடிக்கையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவர் 10,000 ரூபாய்..இக்கு டிக்கெட்டை வாங்கியுள்ளார், மேலும் பார்க்கிங் வசதி சரியாக இல்லாததால் கிழக்கு கடற்கரை சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது, மோசமான வானிலை காரணமாக ஆகஸ்ட் 12 அன்று திட்டமிடப்பட்ட நிகழ்வை நடத்த முடியாமல் கடைசி நேரத்தில் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் மக்களுக்கு பண இழப்பு, கடுமையான மன உளைச்சல் ஏற்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் பலர் நிகழ்ச்சியை காணாமல் வீடு திரும்பினர் தவறான நிர்வாகம் மற்றும் மன உளைச்சலுக்கு புகார்தாரருக்கு இழப்பீடாக ₹50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ₹5,000 இரண்டு மாதங்களுக்குள் வழங்க ஆணையம் ACTC உத்தரவிட்டது.

பிக் ட்ரீ என்டர்டெயின்மென்ட் மற்றும் திரு. ரஹ்மான் ஆகியோர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்பட்டது.

What do you think?

காதலியை கரம் பிடித்த நடிகர் அகில் அக்கினேனி

படத்தின் டைட்டில்…லை அறிவித்த ரவி மோகன்-கார்த்திக் யோகி கூட்டணி