வள்ளியூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா திருத்தேரோட்டம்
வள்ளியூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமா்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கந்தனுக்கு ஹரோகரா முருகனுக்கு ஹரோகரா “வள்ளி மணவாளனுக்கு அரோகரா” கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மிக பெரிய குடைவரைக் கோவில் வள்ளியூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். “வள்ளியூருரை பெருமானே” என அருணகிரிநாதரால் பாடப்பட்ட இத்தலத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையோடு அருள்பாலித்து வருகிறார்.
இங்கு நடை பெரும் முக்கிய விழாக்களில் சித்திரை தேர் திருவிழா சிறப்புக்குரியதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 27 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா காலங்களில் தினமும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம், வீதிஉலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் சிகர நிகழ்வான திருததோ் வைபவம் இன்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ சுப்பிரமணியரசுவாமிக்கு விஸ்வரூபம் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன. பின்னா் உற்சவா் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் சுவாமி அம்பாளுடன் மேளதாளம் முழங்க திருத்தேரில் எழுந்தருளினாா். சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டதும் தேரோட்டம் தொடங்கியது.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் வள்ளிமணவாளனுக்கு அரோகரா முருகனுக்கு ஹரோகரா என பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்த நிலையில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் கட்டளைதாரர்கள் செய்துள்ளனர்.