விவசாயம் செழிக்க மாரியம்மனுக்கு வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை
விவசாயம் செழிக்க கிராம பெண்கள் ஒன்றினைந்து மாரியம்மனுக்கு வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு…
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா துறிஞ்சிப்பூண்டி கிராமத்தில் அருள் பாலித்து வரும் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கிராம பெண்கள் ஒன்றினைந்து உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் குடும்பம் வளர்ச்சி அடையவும் கிராம தேவதையான மாரியம்மனுக்கு ஆடி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கிராம பெண்கள் ஒன்றிரைந்து வேத மந்திரங்களை எழுப்பி அம்மனை நினைத்து திருவிளக்கிற்க்கு மஞ்சள், குங்குமம், பூ, உள்ளிட்டவைகளை கொண்டு பூஜை செய்து பின அம்மனுக்கு வளைகாப்பு செய்து மனமுருகி வேண்டினர்.


