ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் கஞ்சி கலைய ஊர்வலம்
திண்டிவனம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் கஞ்சி கலைய ஊர்வலம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மண்டத்தின் சார்பில் கஞ்சி கலைய ஊர்வலத்தை முன்னிட்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் திருமண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆதிபராசக்தி திருவுருவ படத்திற்கு சிறப்பு ஆராதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது..
தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் தெரு, தேவாங்கர் வீதி வழியாக மன்றத்தை வந்து அடைந்தது. தொடர்ந்து மன்றத்தில் பக்தர்கள் தங்கள் கொண்டு வந்த கஞ்சி கலயத்தை வழிபாட்டு மன்றத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மேலும் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கஞ்சி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் சுகுமார், மன்ற நிர்வாகிகள் முரளிதர், ரத்தினவேலு, கார்த்திக், சுகுணா, பானு, ஸ்ரீமதி, மாலா, ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


