in

மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை நடிகை நமீதா பேட்டி

மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை நடிகை நமீதா பேட்டி

 

மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசையாக உள்ளது, கவர்ச்சி கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை கதையின் மைய நடிகையாக நடிக்க விரும்புவதாக திரைப்பட நடிகை நமீதா பேட்டி

தேனியில் தனியார் நிறுவன உணவகத்தின் (அனிபா பிரியாணி) இரண்டாவது கிளை போடிநாயக்கனூர் விளக்கு பகுதியில் திறக்கப்பட்டது

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை நமிதா மற்றும் நடிகர் ஹர்ஷத் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்காக வருகை தந்த நடிகை நமிதாவை காண்பதற்காக அப்பகுதியில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் குவிந்து ஆரவாரம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய நடிகை நமிதா கூறும் போது

மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு ஆசையாக உள்ளது முன்பு போல் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை, அதனால் நிறைய கதைகளை நிராகரித்துள்ளேன், நடிகைகளை மையமாக வைத்து தற்போது கதைகள் அதிகம் வருகிறது அது போல் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளது.

இயக்குனர் செல்வராகனின் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளேன் என தெரிவித்தார்.

பாலிவுடில் வித்யா பாலன், ராதிகா ஆப்டே, மற்றும் தமிழில் நடிகை ஜோதிகா போன்று கதைகளின் மையமாக உள்ள கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன்

ஓடிடி இணையதளங்களில் ஒரு மாதத்தில் புது படங்கள் வந்து விடுவதால் பொதுமக்கள் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை தவிர்த்து ஓடிடியில் படம் பார்க்கும் மனநிலை மாறி உள்ளது

விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் வேறு துறைகளுக்கு செல்ல இருப்பதால் வெற்றிடங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகை நமிதா

திரைத்துறையில் புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் நடிகைகள் மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய நடிகைகள் வரும்போது, புது முக நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

விஜய் மாதிரியான சிறந்த டான்சர்கள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவுதான், ஒரு நடிகராகவும் டான்ஸர் ஆகவும் திரைத் துறையில் அவரை மிஸ் செய்கிறோம் என தெரிவித்தார்.

What do you think?

‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியா களமிறங்கும் ‘பராசக்தி’

Free Bet No Deposit Ethiopia: A Comprehensive Guide