Whatsapp மெசேஜ்..ஆல் சிக்கிய நடிகர் கிருஷ்ணா… சிறையில் அடைப்பு
நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதை பொருள் பழக்கம் இருப்பதாக கைதான நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவை கைது செய்து விசாரித்தனர்.
ஆனால் தனக்கு உடல்நிலை பிரச்சனை இருப்பதால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது என்று கூறினார்.
அவரது வீட்டில் ஆய்வு செய்தபோது எந்த தடயமும் கிடைக்கவில்லை மருத்துவ பரிசோதனையிலும் நடிகர் கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது.
ஆனால் அவர் மொபைலை சோதனை இட்ட பொழுது கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வாட்ஸ் அப்பில் வந்த நிறைய மெசேஜ்கள் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது.
ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட மெசேஜ் டெலிட் செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அழிக்கப்பட்ட மெசேஜ்களை கண்டுபிடித்த பொழுது இவருக்கும் போதை பொருள் வியாபாரி கேபிஎன்னுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் நண்பர் கெவினும் கிருஷ்ணாவுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாகவும் அவரால் பயன்படுத்த முடியாவிட்டாலும் அவரது நண்பர்களுக்கு கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.