தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் கருத்தரங்கம்
தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட அளவில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட அளவில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
வேளாண் இணை இயக்குனர் விஜயராகவன்,வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டிஆர்ஓ பூங்கொடி தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது
.ஆனால் இப்பகுதி விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் பரப்பளவு மிகவும் குறைவாக இருந்து வருகிறது. காய்கறிகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவதால் இயற்கையான முறையில் விளைவித்ததா என்று தெரியாது.
நெல் பயிர் சாகுபடியை விட தோட்டக்கலை பயிர்களில் தினந்தோறும் வருவாய் கிடைக்கக்கூடிய வகையில் அமைகிறது. தோட்டக்கலை பயிர்கள், காய்கறிகள் சாகுபடி அதிகரிக்க விவசாயிகள் ஆர்வம்காட்ட வேண்டும் என்றார்.
கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் கமல்குமார் காய்கறி சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் குறித்தும், தாவர நோயியல்துறை உதவி பேராசிரியர் வெங்கடேஷ்குமார் காய்கறி பயிர்களின் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும், உழவியல்துறை உதவி பேராசிரியர் பாலசுப்ரமணியன் ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்தும், விதைசான்று அலுவலர் கண்ணன் இயற்கை வேளாண்மை மற்றும் அங்க சான்று குறித்தும், தோட்டக்கலை திட்டங்கள் குறித்த உதவி இயக்குனர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். தோட்டக்கலை துணை இயக்குனர் சந்திரகவிதா வரவேற்றார் உதவி இயக்குனர் பொன்னி நன்றி கூறினார்.


