செஞ்சி சத்தியமங்கலம் அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.
செஞ்சி அருகே திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் என்ற பகுதியில் மகேந்திரா பொலிரோ கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம், திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை காளி கோயில் அருகே அதிவேகமாக வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் தலை குப்புற கவிழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆறு பேரும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
பெங்களூரில் இருந்து செஞ்சி நோக்கி வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட மகேந்திரா பொலிரோ கார், சாலையின் வளைவு பகுதியில் திரும்பும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே தலைக்குப்புற கவிழ்ந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.