பல வருஷம் கழிச்சு மீண்டும் ஒரு தரமான’ கூட்டணி
மம்முட்டி இப்போ இருக்குற ஃபார்முக்கு அவர் தொடுறதெல்லாம் ஹிட்டாகிட்டு இருக்கு.
சமீபத்துல நடிகர் விநாயன் கூட சேர்ந்து அவர் நடிச்ச ‘களம் காவல்’ அப்படிங்கிற கிரைம் திரில்லர் படம் தியேட்டர்ல சும்மா மிரட்டுச்சு.
அந்த வெற்றியைக் கொண்டாடி முடிக்கிறதுக்குள்ள அடுத்த அதிரடிக்கு ரெடியாகிட்டாரு மம்முட்டி.
மலையாளத்துல ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ படம் மூலமா அறிமுகமாகி, ‘லவ்’, ‘தள்ளுமால‘னு வரிசையா டிஃபரண்டான ஹிட் படங்களைக் கொடுத்த காலித் ரஹ்மான் தான் இந்தப் படத்தை இயக்கப்போறாரு.
ஏற்கனவே மம்முட்டியும் காலித் ரஹ்மானும் சேர்ந்து ‘உண்டா’ (Unda) அப்படிங்கிற ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்திருக்காங்க.
அந்தப் படத்துல மம்முட்டியோட நடிப்பு ரொம்ப எதார்த்தமா இருக்கும். இப்போ பல வருஷம் கழிச்சு இந்த ‘தரமான’ கூட்டணி மறுபடியும் சேர்றதுனால, மலையாள சினிமா மட்டுமில்லாம மொத்த சவுத் இந்தியாவே இந்தத் தகவலை ஆவலா கவனிச்சுட்டு இருக்கு.
இந்த புதுப் படம் பத்தின தகவலை மம்முட்டி அவரோட ‘X’ (ட்விட்டர்) தளத்துல அதிகாரப்பூர்வமா ஷேர் பண்ணியிருக்காரு.
“மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி”ங்கிற ரேஞ்சுல அந்தப் பதிவு இப்போ செம வைரல்! ‘உண்டா’ படத்துல ஒரு சீரியஸான போலீஸா பார்த்த மம்முட்டியை, ‘தள்ளுமால’ ரேஞ்சுக்கு ஸ்டைலிஷா இருக்குற காலித் ரஹ்மான் இப்போ எப்படி காட்டப்போறாருங்கிறது தான் இப்போதைய டாக் ஆஃப் தி டவுன்!


