அங்கன்வாடி பணியாளர்களுக்கு இடையில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இடையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது.

சோடாப் பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், ஸ்பூனில் எலுமிச்சம்பழம் வைத்து வாயில் கவ்வியப்படி இலக்கை அடைதல், குண்டு எறிதல், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


