in

துபாயில் போர் பதற்றம்: சிக்கிக்கொண்ட திரை பிரபலங்கள்..!


Watch – YouTube Click

துபாயில் போர் பதற்றம்: சிக்கிக்கொண்ட திரை பிரபலங்கள்..!

 

மத்திய கிழக்கு நாடுகள்ல இப்போ பயங்கரமான போர் பதற்றம் நிலவி வருது. குறிப்பா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான ராணுவ தாக்குதல்கள் உலகத்தையே கவலையில ஆழ்த்தியிருக்கு. ஈரான் நடத்துற ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால, வளைகுடா நாடுகள் முழுக்க பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாயிடுச்சு.

இதனால பல சர்வதேச ஏர்போர்ட்கள் மூடப்பட்டு, விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கு.

சர்வதேச வர்த்தக மையமான துபாய் இப்போ அதிகப்படியான பாதுகாப்பு வளையத்துக்குள்ள கொண்டு வரப்பட்டிருக்கு. அங்க இருக்குற அமெரிக்க நிறுவனங்களை குறி வச்சு தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்ததா சொல்லப்படுது.

ஆனா, துபாய் பாதுகாப்பு படையினர் ஏவுகணைகளை வானிலேயே தடுத்து நிறுத்தி, வான்வழி கண்காணிப்பை பலப்படுத்தியிருக்காங்க. ஊரே இப்போ ஒருவிதமான பயத்துல தான் இருக்கு.

இந்த நேரத்துல, நம்ம தல அஜித் கார் ரேஸ் விஷயமா துபாய்ல இருந்தாரு. போர் பதற்றம் அதிகமானதும், சமூக வலைதளங்கள்ல ரசிகர்கள் “அஜித் சார் சேஃபா இருக்காரா?”னு பதற ஆரம்பிச்சுட்டாங்க.

இதுக்கு அஜித்தோட மேனேஜர் தரப்பு, “அஜித் சார் முழு பாதுகாப்போட இருக்காரு, யாரும் கவலைப்பட வேணாம்” அப்படின்னு சொல்லி ரசிகர்களை நிம்மதி அடைய வச்சிருக்காங்க.

அஜித்தை தவிர, இளம் நடிகர் வசந்த் ரவியும் இப்போ துபாய்ல தான் சிக்கியிருக்காரு. அவர் தன்னோட இன்ஸ்டாகிராம்ல, “பிளான் பண்ணதை விட அதிக நாள் இங்கேயே இருக்க வேண்டிய நிலைமை வந்திருச்சு.

இங்க நடக்குறதை நேர்ல பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”னு ரொம்ப உருக்கமா பதிவிட்டுருக்காரு.

துபாய்ல ஆயிரக்கணக்கான இந்தியர்களும், குறிப்பா தமிழர்களும் வேலை பார்த்துட்டு இருக்காங்க. விமான சேவை இல்லாததால அவங்களால ஊருக்கு திரும்ப முடியாம தவிச்சிட்டு இருக்காங்க.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்க இருக்குறவங்களை தொடர்ந்து கண்காணிச்சுட்டு வர்றாங்க.

அவசர உதவிக்கு ஹெல்ப்லைன் எண்களையும் அறிவிச்சிருக்காங்க. போர் எப்பவுமே சாதாரண மக்களோட வாழ்க்கையைத் தான் பாதிக்கும்.

இந்த பதற்றம் சீக்கிரம் தணிஞ்சு, அங்க இருக்குற நம்ம மக்கள் எல்லாரும் பாதுகாப்பா ஊர் வந்து சேரணும்னு வேண்டிக்கிறோம்!


Watch – YouTube Click Shorts

What do you think?

த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. “அவர் அதுக்கு தகுதியானவர்! “நெகிழும் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ

தளபதி, 750 கோடி செட்டில்மென்ட்? வாபஸ் பெற சங்கீதாவுக்கு கோரிக்கை? முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்?