கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக பெருவிழா
கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான விநாயகர், முருகன், ஆதி கும்பேஸ்வரர், மங்களாம்பிகை என தனி தனி தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது
கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற வடஇந்திய கும்மேளாவிற்கு இணையானது12 ஆண்டுகளுக்கு ஒர்முறை வரும் மகாமக பெருவிழாவிற்காண 12 முக்கிய திருக்கோயில்களில் முதலாவது திருத்தலங்களை போற்றப்படும் மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயில் இந்த திருக்கோவில் ஆண்டு தோறும் மாசிமகம் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இவ்வாண்டு மாசிமக பெருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்கரித்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான 8 ஆம் நாளான இன்று விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை, ஆதி கும்பேஸ்வரர், மங்களாம்பிகை என தனி தனி தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பேஸ்வரா, கும்பேஸ்வரா என்று முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். நாளை ஒன்பதாம் நாளான சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் 2 ஆம் தேதி திங்கட்கிழமை சைவ திருத்தலங்களில் இருந்து உற்சவர்கள் வருகிற பௌர்ணமியுடன் கூடிய மாசி மக நட்சத்திர தினத்தில் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் சுவாமிகள் நண்பகல் 12 மணிக்கு ஒரே சமயத்தில் ஒரு சேர எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


