புதுச்சேரி ஆடம்பரமின்றி எளிய முறையில் திருமணம்.
புதுச்சேரியின் ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. தன்னுடைய சகோதரர் விபத்தில் காயம் அடைந்த போது அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் அவர் இறக்க நேரிட்டது.
தனது சகோதரனைப் போல பிறரும் ஆம்புலன்ஸ் வசதியின்றி இறக்கக் கூடாது என தனது கிராமமான ராமநாதபுரம்-ஊசுடு ஏரி சந்திப்பில் ஆம்புலன்சை வைத்து இலவசமாக மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

இதன் மூலம் ஆம்புலன்ஸ் மணி என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவரது சேவையை பாராட்டி நடிகர் விஜய் சேதுபதி அவரது சேவையை பாராட்டி மேலும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
இதன் மூலம் புதுச்சேரியில் 10 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் மூலம் இலவச சேவை செய்து வரும் மணி இன்று திருமணம் செய்து கொண்டார்.
மிக எளிய முறையில் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமண செலவுவதொகை,உறவினர் மற்றும் நண்பர்கள் சீராக கொடுத்த பணத்தை வைத்து அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார்.
திருமணம் முடிந்த கையோடு பள்ளிக்கு வந்து பொருட்களை கொடுத்து மாணவருடன் விளையாடி மணமக்கள் மகிழ்ந்தனர்.
பத்து ஆண்டுகளில் 6000 உயிர்களை காப்பாற்றியதுடன் 540 பிரசவங்களுக்கு இலவசமாக உதவி செய்த ஆம்புலன்ஸ் மணி எளிய முறையில் திருமணம் செய்து திருமண செலவுத் தொகையை கொண்டு கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுத்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர் .

