ஸ்ரீதுங்க பாலஸ்தனும்பிகா சமேத காத்ரசுந்தரேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திரு கஞ்சனூர் என்கிற கஞ்சாநகரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதுங்க பாலஸ்தனும்பிகா சமேத காத்ரசுந்தரேஸ்வரர் கோயிலில் தை கடைவெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த ஆலயம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரம் தேடும் ஸ்தலங்களில் பிரதான தலமாக விளங்குகிறது இந்த நிகழ்வில் பெண்கள்,திருமண வரம் வேண்டியும், மாங்கல்ய பலம் வேண்டியும்,விவசாயம் செழித்திடவும் தாங்கள் எடுத்து வந்திருந்த திருவிளக்குக்கு குங்குமம், புஷ்பம் உள்ளிட்டவைகளைக் கொண்டு அர்ச்சனை செய்தனர்.
நிறைவாக மகா தீபராதனை காட்டப்பட்டது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


