in

செஞ்சியில் முன்னாள் சென்ற தனியார் சொகுசு பேருந்தின் மீது  லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் 

செஞ்சியில் முன்னாள் சென்ற தனியார் சொகுசு பேருந்தின் மீது  லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் படுகாயம்

இந்த விபத்து காரணமாக செஞ்சி சங்கராபரணி ஆற்றுப்பாலம் பகுதியில் புதுச்சேரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பால் அணிவகுத்து நின்ற வாகனங்கள். 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகே புதுச்சேரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று விடியற்காலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து புதுச்சேரி பகுதிக்கு அரிசி ஏற்றிச் சென்ற லாரி முன்னாள் சென்ற தனியார் சொகுசு பேருந்து மீது மோதிய விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜகிருஷ்ணன்(44) என்பவர் காலில் படுகாயம் அடைந்தார். இதனிடையே அங்கிருந்த பொதுமக்கள் லாரி ஓட்டுநரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் பேருந்தில் வந்த பயணிகள் 30 க்கும் மேற்ப்பட்டோர் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டு அவ்வழியாக வந்த மற்றொரு பேருந்தில் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் கிரேன் வாகனம் உதவியுடன் லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

What do you think?

வடலூரில் களை இழந்த ஆட்டுச் சந்தையால் வியாபாரிகள் ஏமாற்றம்

 பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்