புதுச்சேரி பாகூரில் கஞ்சா போதையில் சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்,5 பேர் மீது வழக்கு.3 சிறார்கள் உள்பட 4 பேர் கைது
புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி. அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுமி பாகூர் பகுதியில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் தெரிந்தது. இதுகுறித்து பெற்றோர் அளித்த தகவலின் பெயரில் பாகூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக அழைத்து வந்து ஒரு வீட்டில் வைத்திருந்ததும் காதலன் நண்பர்களுடன் மது மற்றும் கஞ்சா அருந்திவிட்டு சிறுமையை பாலியல் பலாத்காரம் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியை மீட்டு சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் மீது பாகூர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 3 சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்து தலைமறைவாக உள்ள மேலும் 1 சிறுவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


