காடம்புலியூரில் பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
நெய்வேலி அருகே காடம்புலியூரில் பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட காடாம்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வலியுறுத்தியும் வருகின்ற 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து தலைநகரங்களிலும் பாமக சார்பில் போராட்டத்தை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் மகளிர் அணி, இளைஞரணி, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்
மேலும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்பாடு செய்து தொண்டர்களை அழைத்து வர வேண்டும் வேண்டும்
என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய எழுப்பிடு மற்றும் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் இனி வரும் காலங்களில் நிலங்கள் கையகப்படுத்துவதை என்எல்சி இந்தியா நிறுவனம் நிறுத்த வேண்டும்

பாதுகாப்பற்ற முறையில் நடைபெற்று வரும் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணியால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

