நாகூர் தக்காவில் 1000 பேருக்கு சமபந்தி விருந்து
நாகூர் தர்கா கொடி இறக்கத்தை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாகூர் தக்காவில் 1000 பேருக்கு சமபந்தி விருந்து புலாவு, சிக்கன் 65 சுவிட் வைத்து அசத்தல்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ஆண்டவர் தர்காவின் ஆண்டு கந்தூரி விழா கடந்த 21ஆம் தேதி துவங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று கந்தூரி விழா நிறைவாக கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
இவ்விழாவில் பங்கேற்க தினதோறும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நாகூர் தர்காவிற்கு வந்து செல்கின்றனர்.
அதன்படி நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளையின் சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நாகூர் தர்கா உள்ளே உள்ள அரண்மனையில் அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமாக அமர வைத்து பந்தி போட்டு புலாவ், சிக்கன் 65,ஸ்வீட், தண்ணீர் பாட்டில் மற்றும் சிக்கன் உடன் கூடிய அரண்மனை வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்டோருக்கு விருந்து அளிக்கப்பட்டது.

நாகூரில் தர்காவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற சமபந்தி விருந்து பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


