பாளையங்கோட்டை தசரா திருவிழா
பாளையங்கோட்டை தசரா திருவிழாவின் முதல் நாள் 11 அம்மன் சப்பரங்கள் பிரம்மாண்ட மின் ஒளி அலங்காரத்தில் அணிவகுத்து நின்றதை திரளான பக்தர்கள் நேரில் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மைசூருக்கு அடுத்தபடியாக பிரமாண்டமாக கொண்டாடப்படும் பாளையங்கோட்டை தசரா திருவிழா நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாளையங்கோட்டை நகரின் பிரதான கோவிலான ஆயிரத்து அம்மன் கோவிலில் நடைபெற்ற கொடியேற்றத்தை தொடர்ந்து பாளையங்கோட்டையில் 12 முக்கிய அம்மன் கோவில்களில் தசரா திருவிழா கோலாகலமாக சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
தொடர்ந்து மாலையில் மாலை நகரின் 12 அம்மன் கோவில்களான ஆயிரத்து அம்மன், முப்புடாதி அம்மன், தெற்கு முத்தாரம்மன் வடக்கு முத்தாரம்மன் வடக்கு உச்சினிமாகாளியம்மன் தெற்கு உச்சினிமாகாளி அம்மன் கிழக்கு உச்சினிமாகாளியம்மன் தூத்துவாரி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் உற்சவர் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மாண்டம் மின் ஒளியில் அமைக்கப்பட்டு இருந்த ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து மேளதாளம் முழங்க அம்மன் சப்பரங்கள் வீதி உலா நடைபெற்றது. பின்னர் பாளையங்கோட்டை ராமசாமி சுவாமி கோவில் திடலில் பாளையங்கோட்டை நகரில் அமைந்துள்ள 11 அம்மன் படங்கள் ஒரு சேர அணிவகுத்து நின்று நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


