in

ஒரே நேரத்தில் 7 திருக்கோவில்களில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

ஒரே நேரத்தில் 7 திருக்கோவில்களில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

 

சிதம்பரம் அருகே ஒரே நேரத்தில் 7 திருக்கோவில்களில் வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

சிதம்பரம் அருகே ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பன்னெடும் காலமாக எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ வள்ளி தேவசேன சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ பெரிய அய்யனார், ஸ்ரீ சின்ன அய்யனார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ முத்தாலம்மன், ஆகிய ஏழு திருக்கோவில்கள் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.

நான்கு கால பூஜைகள் முடிந்த பின்பு பூஜை செய்த புனித நீர் கடத்தை தலையில் சுமந்து சென்ற ஆச்சாரியார்கள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தனர்.

இதில் திரளான கிராம மக்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர், இறுதியாக கிராம நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

பாபநாசம் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பௌர்ணமியையொட்டி மகாலட்சுமி ஹோமம்

பெரிய ஸ்டார்..ருக்கான தகுதிகள் தனுஷிடம் இல்லை… பிரபல பத்திரிக்கையாளர் Nayan Deep Rakshat