பாஜகவில் இணைகிறாரா நடிகை மீனா
முன்னணி கதாநாயகியாக சினி துறையில் நீந்திய நடிகை மீனா வித்யாசாகர்…ரை திருமணம் செய்து கொண்டவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்த இவர் மீண்டும் கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். கடந்த வருடம் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வீட்டில் கொண்டாடிய பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகை மீனா மற்றும் டான்ஸ் மாஸ்டர் கலா இருவரும் கலந்து கொண்டனர்.
அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி மீனா பாஜகவில் இணைய போகிறார்? என்ற தகவல் தீயாய் பரவியது ஆனால் மீனா அது குறித்து மௌனம் காத்தார்.
மீண்டும் மீனா டெல்லிக்கு சென்று துணைகுடியரசு தலைவர் ஜெகதீஷ் தன்கர்..ரை சந்தித்துள்ளார் . புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட மீனா, “மாண்புமிகு துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜகதீப் தன்கர் ஜி அவர்கள்…. உங்களை சந்தித்தது எனக்கு ஒரு மரியாதை, ஐயா.
உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன், அது என் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நான் நம்புகிறேன். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி. என்று போஸ்ட் செய்திருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் மீனா பாஜகவில் இணைய போகிறாரா என்று கேள்விகள் கேட்க . அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அல்லது கட்சியின் முக்கியமான பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல் கசிந்திருகிறது.
இந்த புகைப்படத்தை x பக்கத்தில் வெளியிட்ட ப்ளூ சட்டை “பாஜகவில் இணைகிறார் மீனா” விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆதாயம் இல்லாம செட்டி ஆற்றோடு போவானா? பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று?


