திருக்கடையூர் கோவிலில் பாடகர் உன்னிகிருஷ்ணன் குடும்பத்துடன் சாமி தரிசனம்
தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட பாடகர் உன்னிகிருஷ்ணன் குடும்பத்துடன் திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் சிறப்பு வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு சஷ்டி பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் ஆயுள் ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது வருடத்தில் 365 நாட்களும் பக்தர்கள் வந்து சிறப்பு தரிசனம் வழிபாடு செய்து வருகின்றனர்.
நாள்தோறும் அரசியல் பிரமுகர்கள் பிரபலங்கள் வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் திருக்கடையூர் கோவிலுக்கு கர்நாடக இசை பாடகர் தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட பாடகர் உன்னிகிருஷ்ணன் தனது 60 வது வயது முன்னிட்டு தனது மனைவி பிரியா உன்னிகிருஷ்ணன் மற்றும் மகள் சிறு வயதிலேயே திரைப்பட பாடலுக்கு தேசிய விருது பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன் மற்றும் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார்.
கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் கோவில் குருக்கள் கணேச குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வைத்தார். கோவிலில் பாடகர் உன்னிகிருஷ்ணனை பார்த்த பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து புகைப்படம் செல்பி எடுத்துக் கொண்டனர்.


