400 ஆண்டுகால பழமை வாய்ந்த சிலைகள் மாயம்
400 ஆண்டுகால பழமை வாய்ந்த சிலைகள் மாயமானதாக புகார்..திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்..
சிலை மாயமானது குறிப்பு சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகார்..புகார் அளித்தவரிடம் போலீசார் விசாரணை …
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சிக்காலத்தில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து கோவில் இருந்த பழங்கால சிலைகள் அம்மன் வாகனங்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிலையில் கோவில் புனரமைப்பு பணிகளுக்காக எடுத்து வைக்கப்பட்ட கருடாழ்வார் சிலை அம்மன் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் மீண்டும் கோவிலில் வைக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக தேனி ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எஸ் எம் ராஜா என்பவர் திண்டுக்கல் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார் , ஆனால் அவர்கள் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார், இதை அடுத்து புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது இதை அடுத்து எஸ் எம் ராஜாவை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்பன் அனுப்பினர்.
அதன் பேரில் இன்று மாயமான சிலைகள் குறித்த புகைப்பட ஆதாரங்கள் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜரானார் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் உகாந்தம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


