in

ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜை!

ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜை!

 

ஓசூர் செயின்ட் பீட்டர் மருத்துவமனை வளாகத்தில் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜை!

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவமனை வளாகத்தில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் திருக்கோவிலில் புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சங்குநாதம் முழங்க, செண்டை மேளங்கள் இசைக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர்.

What do you think?

 48-வது நாள் மண்டல பூஜை நிறைவு

“கிரீன் மேஜிக் பிளஸ்” புதிய வகை பால் அறிமுகம்