முத்துமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை
நிலக்கோட்டை அருகே உள்ள அம்மையநாயக்கனூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதி வேண்டி 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், உலக அமைதி வேண்டியும், மக்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழவும் மற்றும் விவசாயம் செழிக்கவும் வேண்டி மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, மஞ்சள், குங்கும் இட்டு, பொங்கள், வாழைப்பழம், பூக்கள் படைத்து திருவிளக்குகளை ஏற்றி பக்தி பரவசத்துடன் அம்மனை போற்றி பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே ஆன்மிக உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது, நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

