முலைப்பால் தீர்த்தம் நிரம்பியதால் ஆன்மீக பக்தர்கள் மகிழ்ச்சி
2668 உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை மீது பல்வேறு இடங்களில் ஆர்ப்பரித்து ஓடும் மழை நீர்…..
முலைப்பால் தீர்த்தம் நிரம்பியதால் ஆன்மீக பக்தர்கள் மகிழ்ச்சி…..
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2668 உயரம் கொண்ட மலையை சிவனாக கருதி மலையை சுற்றி 14 கிலோமீட்டர் பக்தர்கள் அனுதினமும் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை மீது பல்வேறு இடங்களில் சிறுசிறு நீர்வீழ்ச்சி போல் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடுகின்றது.

இந்த மழை நீரில் சாதுக்கள் மற்றும் சாமியார்கள் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக அண்ணாமலையார் மலை மீது ஓடும் மழை நீர் மலை மீது உள்ள முலைப்பால் தீர்த்தம் என்று சொல்லக்கூடிய புனித நீர் கிணற்றில் முழுவதுமாக விழுந்து தற்போது முலைப்பால் திருத்தம் முழுவதும் நிரம்பியுள்ளதால் ஆன்மீக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இது போன்ற மழை தொடர்ந்து பெய்து வந்தால் நந்தி வாய் என்று சொல்லக்கூடிய இடத்திலும் விரைவில் நீர்வீழ்ச்சி உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

