in

இராஜராஜ சோழன் லோகமா தேவி நகர்வலம்

இராஜராஜ சோழன் லோகமா தேவி நகர்வலம்

 

இராஜராஜ சோழன் சதய விழாவை ஒட்டி இராஜராஜ சோழன் லோகமா தேவி ஆகியோரது செப்புத் திருமேனி சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி சிவ கணங்கள் இசைக்க தப்பாட்டம் கோலாட்டம் காளியாட்டம் என நாட்டுப்புற இசையுடன் ராஜ வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு காட்சி அளித்தனர்.

தஞ்சையில் பெரிய கோவிலை எழுப்பி உலகம் போற்றும் பேரரசனாக திகழ்ந்த ராஜ ராஜ சோழனின் 1041 வது ஆண்டு சதய விழாவின் இரண்டாம் நாளான 22ம் தேதி இரவு இராஜராஜ சோழன் லோகமா தேவி நகர்வலம் நடைபெற்றது.

முன்னதாக நடராஜர் சன்னதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழன் லோகமாதேவி ஆகியோரது செப்பு திருமேனி சிலைகளுக்கு தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜைகள் செய்தார்.

நடராஜர் சன்னதியில் இருந்து நந்தி மண்டபம் மேடை முன்பு கொண்டுவரப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு பின்னர் சிவகணங்கள் இசைக்க கொம்பு இசை பறை இசை கோலாட்டம் தப்பு இசை காளி ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற இசையுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

 

மிகவும் போலிஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள இராஜராஜ சோழன் லோகமா தேவி செப்பு திருமேனி சிலைகள் வருடத்திற்கு ஒருமுறை சதய விழா அன்று பொதுமக்கள் பார்வைக்காக ராஜ வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சதய விழா

Casino Bonus Smartphone: Alles, was Sie wissen müssen