in

பூம்பல்லக்கு வீதி உலா

கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வார்–உலோபா முத்திரை அம்பாள் கோவில்: பூம்பல்லக்கு வீதி உலா, பக்தர்கள் திரள்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் உள்ள அகஸ்தீஸ்வார்–உலோபா முத்திரை அம்பாள் கோவிலில் திருவிழா உற்சாகமாக நடைபெற்று வருகிறது..

 

கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளில் பூம்பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பாபநாசம் பாபநாசநாதர்–உலகாம்பிகை கோவில்: ஏகசிம்மாசன தரிசனம், சித்திரை விசு உற்சவம் உற்சாகம்

பாபநாசத்தில் உள்ள பாபநாசநாதர்–உலகாம்பிகை கோவிலில் சித்திரை விசு உற்சவம் நடைபெற்று வருகிறது. தினசரி பூஜைகளுடன் நடைபெறும் விழாவின் ஆறாம் நாளில் ஏகசிம்மாசனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெற்றது.

இதனை காண பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர். இரண்டு கோவில்களிலும் திருவிழா நிகழ்ச்சிகள் பக்தி உணர்வுடன் நடைபெற்று வருகின்றன.

What do you think?

புதுச்சேரி வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு திருவிழா கொடியேற்றம்