புதுச்சேரியில் உலக சிட்டுக்குருவி தினம்: பொதுமக்களுக்கு 1,000-க்கும் மேற்பட்ட செயற்கை கூடுகள் வழங்கி நெகிழ்ச்சி !
புதுச்சேரி உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி, அருணா லேப் மற்றும் புதிதாய் உதயமாகி உள்ள அருணா சிடி ஸ்கேன் (Aruna CT Scan) நிறுவனம் சார்பில், ஐந்தாம் ஆண்டாக இன்று பொதுமக்களுக்கு சிட்டுக்குருவி கூண்டுகள் விலையில்லா அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் மூலம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ‘அருண் பசுமை இயக்கம்’ (Arun Pasumai Iyakkam) நிறுவனர் திரு. அருண் அவர்கள் முன்னின்று செய்து கொடுத்தார்.
நிகழ்ச்சியில் ஆல்பா ராஜா மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.. சிட்டுக்குருவிகள் மீண்டும் நம் வாசல் தேடி வர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்னெடுக்கப்படும் இந்தச் செயல்பாடு, சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

