‘ஜனநாயகன்’ படத்துக்கு ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்குறீங்க?” – சீமான் சப்போர்ட்
விஜய் – எச்.வினோத் கூட்டணியில வர்ற ‘ஜனநாயகன்’ வர்ற ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகணும்.
ஆனா, படத்துக்கு இன்னும் சென்சார் சர்டிபிகேட் (தணிக்கை சான்றிதழ்) கிடைக்கல. இதுதான் இப்போ கோலிவுட்டோட ஹாட் டாபிக்!
விஜய் சாருக்கு அப்புறம் ரிலீஸ் ஆக வேண்டிய SK-வோட ‘பராசக்தி’ படத்துக்கே சர்டிபிகேட் கிடைச்சிருச்சு.
ஆனா, விஜய்யோட படத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு இழுபறி? இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு ‘அரசியல் சதி’ இருக்குன்னு தளபதி ரசிகர்கள் செம காண்டுல இருக்காங்க.
இந்த விவகாரம் பத்தி பேசின நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்க்கு சப்போர்ட்டா பேசியிருக்காரு:
“இந்தப் படத்துக்கு சான்றிதழ் கொடுக்காம இப்படி இழுத்தடிக்க வேண்டிய அவசியமே இல்லை.” “நான் இந்தப் படத்தோட தெலுங்கு வெர்ஷனைப் பார்த்தேன். அதுல சென்சார் பண்ணுற அளவுக்குப் பெரிய தப்பான விஷயம் எதுவுமே இல்லை.”
“ஏதோ ஒரு சர்டிபிகேட்டை கொடுத்துட்டு படத்தை ரிலீஸ் பண்ண விடுங்க. இதுல எதுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்குறீங்க?”னு காட்டமா கேள்வி கேட்டுருக்காரு.
ரிலீஸ்க்கு இன்னும் 48 மணி நேரம் கூட இல்லை. கோர்ட்ல வழக்கு ஒரு பக்கம் ஓடிட்டு இருக்கு, சீமான் மாதிரி தலைவர்கள் ஒரு பக்கம் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க.
இன்னைக்குள்ள சர்டிபிகேட் கிடைச்சாதான் தியேட்டர்கள்ல புக்கிங் ஸ்மூத்தா நடக்கும். பாப்போம்.. தளபதியோட ‘ஜனநாயகன்’ எல்லா தடைகளையும் தாண்டி ஸ்கிரீனுக்கு வர்றாரான்னு! பாப்போம்.


