புவனகிரியில் ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து நீர்வளத்துறையினர் எல்லை அளவீடு
புவனகிரியில் ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து நீர்வளத்துறையினர் அளவீடு செய்து எல்லை குறித்தனர்.
திடீரென அளவீடு பணி நடைபெற்றதால் வணிகர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி
கடலூர் மாவட்டம் புவனகிரி வெள்ளாற்று கரைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து அளவிடும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திடீரென நீர்வளத் துறையினர் வெள்ளாற்றின் எல்லையை அளவிடும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களது அளவீட்டின் போது கட்டிடங்கள் குடியிருப்பு பகுதியில் வருவதாக கூறி அளவீட்டின்படி ஆற்றின் கரை எதுவரை வருகிறது என எல்லையை குறிப்பிட்டனர்.
நீர்வளத்துறையினரின் அளவீடு குறித்து அறிந்த வணிகர்களும் பொதுமக்களும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

நீர்வளத்துறையினர் எல்லை அளவிடும் பணி நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு இதனால் வர்த்தக வியாபாரிகளும், குடியிருப்பு வாசிகளிடம், பொதுமக்களிடமும் பெரும் குழப்பம் ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழல் உருவாகும் என அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.


