in

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி

சமூக பொறுப்புணர்வு திட்டம் 2025 2026 மேம்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ஓஎன்ஜிசி காவிரி அசெட் காரைக்கால் சமூக பொறுப்புணர்வு திட்டம் 2025 2026   மேம்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் நிகழ்ச்சி ஓஎன்ஜிசி இ.டி அசெட் மேனேஜர் உதய்பாஸ்வான் தலைமையில் ஓஎன்ஜிசி சி.எஸ்.ஆர் இன்சார்ஜ் தங்கமணி முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜே.டி ஹெல்த் சர்வீஸ் பானுமதி,காரைக்கால் ஓஎன்ஜிசி ஏ.எஸ்.எம். பிரசென்ஜித் கோகாய்,ஓஎன்ஜிசி ஐ.சி மெடிக்கல் அடின் மண்டல்,இன்ஸ்டலேசன் மேனேஜர் குத்தாலம் ஜி.சி.எஸ் பிங்குவா,உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவாக மருத்துவமனை தலைமை மருத்துவர் அதிகாரி மருதவாணன் நன்றி கூறினார்.

What do you think?

தவெக தலைவர் விஜய் சொன்ன ஒரு ‘குட்டிக்கதை’ தான் இப்போ பெரிய விவாதத்தையே கிளப்பிருக்கு

கச்சத்தீவு ஆலய விழாவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து படகுகளில் பக்தர்கள் பயணம்