in

பாபநாசம் அருகே பள்ளியூர் கிராமத்தில் குடிநீர், மின்சாரம், பழுதடைந்து காணப்படும் இ சேவை மைய கட்டிடம்

பாபநாசம் அருகே பள்ளியூர் கிராமத்தில் குடிநீர், மின்சாரம், பழுதடைந்து காணப்படும் இ சேவை மைய கட்டிடம், நூலகம் …..

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை ……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பள்ளியூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன .

இந்நிலையில் நீண்ட நாட்களாக குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வருவதாகவும், தண்ணீர் குடிப்பதற்கு இல்லாமல் நெடுந்தூரம் சென்று குடிநீர் பிடித்து வருவதாகவும்கிராம மக்கள்குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் மின்சார வசதிகள் இல்லாமல் தவிர்த்து வருவதாகவும், இரண்டு வருடங்களாக தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்காமல் பாதியிலேயே விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கின்றனர்,

இந்த கிராமத்தில் இ சேவை மையம் கட்டிடம் கட்டி உள்ளதாகவும் அதை செயல்பாட்டுக்கு பயன்படுத்தாமல் பூட்டி வைத்து புல் மண்டி கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்,

மேலும் கிராமத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட நூலகம் சிதலமடைந்து நூலகத்தின் உள்ளே புத்தகங்கள் வீணாகி போகின்றது எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டம் நிர்வாகம் தமிழக முதல்வர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

What do you think?

பாபநாசம் அருகே மேல கபிஸ்தலத்தில் ரூ.12,50,000 லட்சம் மதிப்பீட்டின் புதிய நியாய விலை அங்காடி

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்ச்சவ தோ்த் திருவிழா