in

காலதாமதமாக திறக்கப்படும் கால்நடை மருத்துவமனை

காலதாமதமாக திறக்கப்படும் கால்நடை மருத்துவமனை

 

காலதாமதமாக திறக்கப்படும் கால்நடை மருத்துவமனை – உரிய நேரத்தில் மருத்துவமனையை திறந்து கால்நடைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதி பகுதி, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதி கால்நடை வளர்ப்போர் பயன் பெரும் வகையில் இங்கு அரசு பகுதி நேர கால்நடை மருத்துவமனை அமைத்துள்ளது.

இதன் மூலம் ஏனாதி, பாலமுத்தி, நல்வழி கொல்லை, வேப்பங்காடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர் இங்கு வந்து கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் இந்த கால்நடை மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனை என்பதால் வாரத்தில் மூன்று நாட்கள் செவ்வாய், வியாழன், சனி கிழமைகளில் மட்டுமே மருத்துவர்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் எட்டு மணிக்கு திறக்கப்பட வேண்டிய கால்நடை மருத்துவமனை 11 மணி ஆகியும் திறக்கப்படாமல் நீண்ட நேரம் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வந்து காத்திருக்கும் அவலம் ஒவ்வொரு வாரமும் இருந்து வருகிறது .

இதனால் கால்நடை வளர்ப்போரின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளுக்கு உண்டான நோய்களின் தாக்கமும் அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே உரிய நேரத்தில் மருத்துவமனையை திறந்து கால்நடை வளர்ப் போரின் சிரமத்தை போக்கவும் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

What do you think?

நெற்பயிரியல் மோடி பெயரை வரைந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த விவசாயிகள்

ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்ட பேரணி