பறவைகளை மொத்தமாகப் பார்க்கும் இடமாக வடுவூர் பறவைகள் சரணாலயம்
டெல்டா பகுதி மக்களுக்குப் பறவைகளை மொத்தமாகப் பார்க்கும் இடமாக வடுவூர் பறவைகள் சரணாலயம் இருந்தாலும் பறவைகளைத் தொட்டு அதோடு விளையாடி மகிழ அமைக்கப்பட்டது.
தான் இந்த ராஜாளி பறவைகள் பூங்கா. தஞ்சையில் உள்ள சுற்றுலா இடங்களில் இது முக்கிய அங்கமாகவே மாறி உள்ளது.
இப்பூங்காவில் 20 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான அறிய வகை பறவைகள் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இப்பூங்கா மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விருப்பமான இடமாக மாறியுள்ளது.
தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளோடு பறவைகள் பூங்காவிற்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். இந்த நிர்வாத்தினர் கோடை வெப்பத்திலிருந்து பறவைகளை பாதுகாப்பதற்காக அவ்வபோது ஸ்ப்ரே மூலம் தண்ணீர் தெளித்தும் வருகின்றனர். பிரேம் மூலம் தெளிக்கப்படும் தண்ணீர் பறவைகளுக்கு மட்டுமல்லாமல் இருவரும் சுற்றுலா பயணிகளுக்கும் இதமான சூழலை உருவாக்குகிறது.
மேலும் இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில்..
ராஜாளி பறவைகள் பூங்காவுல நெருப்புக்கோழி, வெளிநாட்டுக்கோழி வகைகள், முள்ளம்பன்றி, முயல், வாத்து, சில விலங்குகளும் இருக்குது. முக்கியமா இங்கே இருக்கிற அரிய வகை பறவைகள் எல்லாம் பார்க்குறது ரொம்ப அழகாவும் மகிழ்ச்சியையும் ஏற்படுது. இதற்கு நுழைவு கட்டண 150 ரூபாய் பெறப்படுது..
150 ரூபாயா இருந்தாலும் நம்ம எவ்வளவு நேரம் வேணாலும் பறவைகளோட டைம் ஸ்பென்ட் பண்றதுக்கு ஏதுவாதான் இருக்கு. அது மட்டும் இல்லாம இந்த வகை பறவைகள் அதிக வெப்பத்தை தாங்க கூடியது இல்லை, அப்படிங்கிறதால ஸ்ப்ரே மூலம் தண்ணீர் தெளித்தும் வராங்க. பறவைகளுக்கு மட்டும் இல்லாம வெயில்ல அலைஞ்சு திரிஞ்சு இந்த பறவைகள் பூங்காவுக்கு நாங்க வரும்போது மழை சாரல் மாறி வெயிலுக்கு இதமா இருக்கு என்று கூறினர்.