in

புதுச்சேரி சட்டப்பேரவையில் அமளி… எதிர்க்கட்சியினர் குண்டுகட்டாக வெளியேற்றம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் அமளி… எதிர்க்கட்சியினர் குண்டுகட்டாக வெளியேற்றம்

 

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6 வது பட்ஜெட் கூட்டத்தொடர்
மார் 10-ம் தேதி துவங்கி மார்ச் 27-ம் தேதி முடிந்தது..

6 மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற விதியின் கீழ் இன்று காலை 10.38 மணிக்கு பேரவை கூடியது.

சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபையை தொடங்கினார். தொடர்ந்து இறந்த தலைவர்களுக்கு இறங்கல் தீர்மானமும் இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானங்களை சபாநாயகர் வாசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, குடிநீர் பிரச்னை குறித்து பேச
நேரம் ஒதுக்க வேண்டும்..அறிவித்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரவில்லை..

அவை குறித்து விவாதிக்க வேண்டும்..ஒரு மணி நேரம் அவையை நடத்த கூடாது..அவையை கூடுதல் நாட்களுக்கு நடத்த வலியுறுத்தினார்… முதல் அமைச்சருடன் கலந்து பேசி சொல்வதாக கூறி சபாநாயகர் செல்வம் அடுத்த அலுவலுக்கு செல்ல எதிர்கட்சியினர் சபாநாயகர் இருக்கை முன் சென்று கோஷமிட அவர்களை தூக்கி போட சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபை காவலர்கள் குண்டு கொட்டாக தூக்கி வெளியேற்றி வந்தனர்.

தொடர்ந்து சட்டசபை மைய மண்டபம் அருகே அமர்ந்த காங்-திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
புதுச்சேரி மக்களுக்கு அறிவிக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப் படவில்லை, மூன்று மாதமாக ரேஷன் அரிசி வழங்கப்படவில்லை, சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை
என கோஷங்களை எதிர்க்கட்சியினர் முழக்கினார்கள்.

பேட்டி… சிவா..எதிர்கட்சிதலைவர்…

அதே நேரத்தில் சட்டப்பேரவையில் வணிகம் செய்தலை எளிதாக்கும் சேவை, சரக்கு மற்றும் சேவை வரி திருத்தம், நகராட்சி, கிராமம், கொம்யூன் பஞ்சாயத்து சட்ட திருத்தங்கள், நகரம் மற்றும் கிராமத் திட்டமிடல் சட்டம் முன் வரைவு ஆகிய சட்டம் முன்வரைவுகள் இயற்றப்பட்டன…

இறுதியாக 10.20 மணிக்கு தேதி குறிப்பிடாமல் அவை நடவடிக்கையை ஒத்திவைத்தார் சபாநாயகர் செல்வம்..

காலை 9.38 மணிக்கு துவங்கிய பேரவை கூட்டம் 10.20 மணிக்கு முடிந்தது.
42 நிமிடங்கள் மட்டுமே இன்றைய கூட்டம் நடந்தது…

What do you think?

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் வெளிநாட்டவர்கள் உணவு வழங்கி மகிழ்ச்சி