in

மீன்பிடிக்கும் போது நடுக்கடலில் நிலை தடுமாறி கடலில் விழுந்த இரு மீனவர்கள

மீன்பிடிக்கும் போது நடுக்கடலில் நிலை தடுமாறி கடலில் விழுந்த இரு மீனவர்கள

மீன்பிடிக்கும் போது நடுக்கடலில் நிலை தடுமாறி கடலில் விழுந்த இரு மீனவர்கள்.*ஒருவரை பத்திரமாக மீட்பு. மற்றொரு மீனவரை கடலோர காவல் போலீசாரும் மீனவர்களும் படகுகளில் தேடும் பணி தீவிரம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகர் வடக்கு பகுதியை சேர்ந்த விவேக்(30),  கணவர் தமிழக பகுதி பொம்மையார்பாளையம் சேர்ந்த கரிகாலன் (36) ஆகியோர் அதிகாலை 3 மணி அளவில் மீன்பிடிக்க அதி வேகமாக செல்லக்கூடிய சுசூகி படகில் கடலுக்கு சென்றனர்.

நடுக்கடலில் சுமார் 20 மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இருவரும் நிலை தடுமாறி திடீரென தவறி கடலில் விழுந்துள்ளனர்.. இத்தகவல் அறிந்தவுடன் சோலை நகர் மீனவர்களும் மற்றும் கடலோர காவல் நிலைய போலீசாரும் படகில் சென்று தேடினர்.

இதில் மீனவர் விவேக் கடலில் நீச்சல் அடித்துக் கொண்டு நீண்ட நேரமாக தத்தளித்த போது சோலை நகர் மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.அவர் மயக்க நிலையில் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.தொடர்ந்து.

கரிகாலன் என்பவரை மீனவர்களும் போலீசாரும் தேடி வருகின்றனர்.அதிகாலையில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது இரண்டு மீனவர்கள் நடுக்கடலில் தவறி விழுந்த சம்பவத்தினால் சோலை நகர் பகுதியில் மீனவர்கள் கதறி அழுது வருவதால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

What do you think?

விருத்தாசலத்தில், சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி —ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கூடலழகர் திருக்கோவிலில் நடைபெற்ற 1008 கலச திருமஞ்சனம்