in

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன். 

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன். 

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க- கூட்டணி கட்சி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது.

கஞ்சா, போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதால் இளைஞர்கள், மாணவர் சமுதாயங்கள் போதைக்கு அடிமையாகி சமூக விரோத செயலில் ஈடுபடும் நிலைக்கு தி.மு.க அரசு தள்ளி உள்ளது.

பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் தங்களது குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியே அனுப்பவே பயப்படுகின்றனர்.

பச்சிளம் குழந்தைகளை கூட பாலியல் வன்கொடுமை செய்யும் அவல நிலை இந்த ஆட்சியில் தான் நடந்து வருகிறது .

தி.மு.க ஆட்சியில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை. தமிழகத்தில் முதல்வரின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு ரூ. 5000 மகளிர் உரிமை தொகை மற்றும் கோடைகால சிறப்பு தொகை வழங்கி ஓட்டு போட வைத்து விடலாம் என திமுக அரசு தப்பு கணக்கு போட்டுள்ளது .

ஆனால் பெண்கள் ஏமாற தயாராக இல்லை. வரும் தேர்தலில் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. அதனைப் பெண்களே செய்து விடுவார்கள். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சியை விரட்டி அடிப்பார்கள்.

தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆட்சிக்கட்டிலில் அமர்வார். நான் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தேன்.

மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்பதற்காக மன வருத்தங்களை எல்லாம் விட்டு விட்டு கூட்டணியில் இணைந்துள்ளேன்.

தற்போது எந்தவிதமான மன கசப்பும் இல்லை. அனைத்தும் சரியாகிவிட்டது. தி.மு.க.விற்கு எதிராக எம்ஜிஆர் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கினார்.

ஜெயலலிதா அதனை கட்டிக்காத்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக திறம்பட பணியாற்றி வருகிறார்.

ஆனால் அதிமுகவில் எம்எல்ஏ, அமைச்சர், ஏன் முதல்வர் பதவியை கூட அனுபவித்து பலனடைந்து தற்போது அங்கிருந்து விலகி எதிரி கட்சியான திமுகவில் இணைந்து சிலர் நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர். அவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது. தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

What do you think?

Скачайте приложение Pin‑Up Casino: ваш ключ к азарту на ходу

திருவலஞ்சுழியில் பிறந்த குழந்தை 3 மர்ம நபர்கள் வீட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.