in

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல் அவதி

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல் அவதி

 

மயிலாடுதுறை நகரில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தை 10 நிமிடம் முன்னதாக இழுத்து மூடிய அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாமல் அவதி.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-4 பணிகளுக்கான தேர்வுகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்வுகள் இன்று காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கின. தேர்வு எழுதும் நபர்கள் காலை ஒன்பது மணிக்கு தேர்வு மையத்திற்குள் வரவேண்டும் என ஹால் டிக்கெட்டில் அறிவுரைத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிராமப்புறங்களில் இருந்து வரும் தேர்வர்கள் இரண்டு பேருந்துகள் மாறி 8:50 மணிக்கு மயிலாடுதுறையில் ஆசாத் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் தேர்வு மையத்திற்கு வந்தனர் ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடம் முன்னதாக பள்ளியின் வாயில் கதவை இழுத்து மூடிய அதிகாரிகள் தேர்வு எழுத 50கும் மேற்பட்டோரை அனுமதி மறுத்துவிட்டனர்.

தேர்வு எழுத வந்த பெண்கள் கண்ணீருடன் கேட்டுப் பார்த்தும் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டும்,

எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.தாமதமாக வந்திருந்து தேர்வு எழுத அனுமதி மறுத்து இருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருப்போம் ஆனால் தேவை இன்றி தங்கள் வாழ்க்கையை அதிகாரிகள் வீணடித்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி தேர்வு அறை முன்பு காத்திருக்கின்றனர்.

What do you think?

மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்

‘கன்னடத்து பைங்கிலி’  நடிகை சரோஜா தேவி என்று காலமானார்