in

பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா- மீன்களை அள்ளிச் சென்றனர்

பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா- மீன்களை அள்ளிச் சென்றனர்

 

மதுரை விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் கருப்புசாமி கம்ப காமாட்சி கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்களை அள்ளிச் சென்றனர்.

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் அருள்மிகு கருப்புசாமி கம்ப காமாட்சி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

நேற்று இரவு முதல் விடிய விடிய சுவாமி அம்பாளுக்கு பூஜைகள் நடைபெற்று காலை 5:30 மணி அளவில் 3 அதிர் வேட்டுக்கள் வெடித்தவுடன் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தல் தொடங்கியது. இதில் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் தேனி திண்டுக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீன்பிடி ஆர்வலர்கள் கலந்து கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர்.

முதலைக்குளம் கண்மாயில் மீன்களை பிடித்து உண்பதால் நோய்கள் குணமாவதாகவும் வேண்டுதல் நிறைவேறுவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர் மீன்பிடி திருவிழாவினை முதலைக்குளம் கண்மாய் பாசன சங்கத் தலைவர் ராமன் ஒருங்கிணைப்பு செய்தார்.

பாரம்பரிய முறைப்படி வருடம் தோறும் மீன் பிடி திருவிழா நடைபெற்று வருவதாகவும் மீன்பிடித் திருவிழா நடத்துவதால் கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதாகவும் நம்பப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை 10,000 மேற்பட்ட மீன்படி ஆர்வலர்கள் கம்மாய்க்குள் இறங்கி 5 கிலோவில் இருந்து 12 கிலோ வரை ஒரே மீனாக பல்லாயிரம் மக்கள் ஆர்வத்துடன் பிடித்து சென்றனர்.

ஆறு மணிக்கு மீன் பிடித்தவர்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது வருடம் தோறும் நடைபெறும் இந்த மீன்பிடி திருவிழாவானது இந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

நாளை வெளியாகும் திரைபடங்கள்

ஒரு நாளும் முருகனை வழிபாடாமல் இருந்ததில்லை புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் பேட்டி