in

கமலை மன்னிப்பு கேட்க சொன்னது தவறு


Watch – YouTube Click

கமலை மன்னிப்பு கேட்க சொன்னது தவறு

மணிரத்தினம் கமலஹாசன் இணைந்த தக்லைப்  திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்க்கு வெற்றி பெறவில்லை ஆனால் கமலுக்கு கர்நாடகாவிற்கும் நடந்த பிரச்சனை மட்டும் இன்னும் ஓய்ந்த பாடில்லை

thuglife திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என்று கர்நாடக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் இது தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது நீதிமன்றம் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய பொழுதும் கமலஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார் இதனால் thuglife திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எப்படி நீதிமன்றம் கூற முடியும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறது

மேலும் ஒரு படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுத்த பிறகு படத்தை திரையிட தடை விதிக்க கூடாது thuglife திரைப்படம் வெளியாகும் போது திரையரங்கிற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் இது தொடர்பான விளக்கத்தை கர்நாடக நீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூற இதற்கு கமல் ரசிகர்கள்…. யார் என்று தெரிகிறதா இவன் தீ என்று புரிகிறதா என்று இணையத்தில் துள்ளிகுதிக்க மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இவர்களை ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர் வசூல்..லில் மரண அடி வாங்கிய thuglife கர்நாடகாவில் வெளியானால் கொஞ்சம் கல்லா கட்டலாம்

What do you think?

wheel chair..ரில் இலங்கைக்கு சென்ற ப்ரியங்கா தேஷ் பாண்டே

கதறி அழுது வீடியோ வெளியிட்ட ரியா தியாகராஜன்