மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி தின திருவிளக்கு பூஜை
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி தின திருவிளக்கு பூஜை – திரளான பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜையில் ஈடுபட்டு சாமி தரிசனம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும்.
இத்திருத்தளத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்து வரும் நிலையில் நேற்று சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவர் அம்மனுக்கு பால், தயிர்,சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்,சிறப்பு அலங்காரமும் செய்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்ட பின் தீபாரணை நடைபெற்றது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் 108 பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.
திருக்கோவில் பூசாரிகள் அம்மனைப் போற்றி பாடல்கள் பாடினர்.
ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.