in

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி 313ஐ உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் அங்கன்வாடிகள் உடனடியாக அரசு ஊழியராக வேண்டும்

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி 313ஐ உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் அங்கன்வாடிகள் உடனடியாக அரசு ஊழியராக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக மாபெரும் அடையாள வேலை நிறுத்தம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவித்திடு.அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிடு.அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.9000/-ஆயிரம் வழங்கிடு.


மே மாத விடுமுறை ஒரு மாதமாக வழங்கிடு.மினி மையங்களிலிருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கான ஒரு இன்கிரிமெண்ட் அல்லது பணியில் சேர்ந்த தேதியை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பையும், முன்பருவ கல்வியின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக காலி பணியிடங்களை நிரப்பிடு.
1993-இல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களின் பதவி உயர்வை உடனடியாக வழங்கிடவும். பதவி உயர்வில் நேரடி நியமனத்தை கைவிடுக. 100% பதவி உயர்வை அங்கன்வாடி ஊழியர்களுக்கே வழங்கிடு.அரசு புதிய நியமனம் (12ம் வகுப்பு தேர்ச்சி) கணக்கில் கொள்ளாமல், 10 வருடம் பணிமுடித்து.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற உதவியாளர்களுக்கும், 5 வருடம் பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவதை உத்திரவாதப்படுத்திடுக.
குழந்தைகளின் பாதுகாப்பையும், முன்பருவக் கல்வி முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு BLO பணியில் இருந்து, அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை விடுவித்திடு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து பேருந்து மூலம் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

What do you think?

திண்டுக்கலில் அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மடிக்கணினி வழங்கிய அமைச்சர் அர.சக்கரபாணி

தொழிலாளர்கள் சங்கத்தினர் பொங்கல் போனஸ் 15000 வழங்க வலியுறுத்தி ஆர்பாட்டம்