in

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவில்மாசி திருவிழா ஆண்டுகள் தோறும் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்..

இந்த ஆண்டு மாசி திருவிழா  கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மாசி பெருவிழாவில் மயான கொள்ளை,தீ மிதி,தேர் திருவிழா போன்ற சிறப்புமிக்க திருவிழாக்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தோடு தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றுது.

இரவு அங்காளம்மன் அக்னிகுலத்திலிருந்து பம்பை உடுக்கை மேல தாளங்கள் முழங்க பக்தர்களின் பக்தி கரகோசத்தோடு புறப்பட்டு பின்னர் திருக்கோயிலில் உள்ள கெங்கையம்மன் குலத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

பலவகை வண்ண பூக்கள் கொண்டு கண் கவரும் கலர் மின் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் அங்காளபரமேஸ்வரி தெப்ப குலத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தால் இவ்விழாவில் திராளன பக்தர்கள் கலந்துக் கொண்டு ஓம் சக்தி அங்காளம்மா என பக்தி பரவசமாக வழிபட்டனர்.

இவ்விழா ஏற்பாட்டினை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மேலாளர் மணி அலுவலர்கள் சதீஷ். கலை ஆகியோர் தலைமையிலான குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை  மேல்மலையனூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல்அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை அறங்காவலர்கள்,சுரேஷ் மதியழகன்,பச்சையப்பன், செல்வம், வடிவேல், சந்தானம், கோவில் மேலாளர் சதீஷ் ,காசாளர் மணிகோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

What do you think?

சிதம்பரத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் சேதம்,

அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த வழக்கறிஞர்