in

பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொங்கல் பண்டிகைக்காக “அகப்பை” தயாரிக்கும் பணி தீவிரம்.

பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொங்கல் பண்டிகைக்காக “அகப்பை” தயாரிக்கும் பணி தீவிரம்

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது தான் தமிழர்களின் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்ச மாக வெளிப்படும். இதில் ஒன்றுதான் “அகப்பை ” பயன்படுத்தும் விதம் .பொங்கல் திருவிழாவின் போது புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் நன்னாளாகும்.


இந்த நன்னாளின் போது மண்பானையில் உள்ள அரிசியை கிளறுதற்கு அகப்பையை முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த “அகப்பை” தேங்காய் கொட்டாங்குச்சியினை சுத்தம் செய்து, அதில் மூங்கிலை சீவி இரண்டடி நீளத்தில் கைப்பிடியாக்கி பயன்படுத்தி
வந்தனர்.அகப்பையை பயன்படுத்தும் போது, அதன் மனமும் பொங்கல் சுவையும் மேலும் சுண்டி இழுக்கும்.காலப்போக்கில் நாகரீகத்தின் வெளிப்பாடாக சில்வர்,பித்தளை கரண்டிகளின் வரவால் அகப்பை காணாமல் போனது.


ஆனால் தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு என்ற கிராமத்தில் மட்டும் பொங்கல் தினத்தன்று அகப்பையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர் அந்த கிராம மக்கள். இதற்காக அவ்வூரில் உள்ள தச்சுத்தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து பொங்கல் தினத்தன்று அதிகாலையில் ஊர்மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்கி விடுவார்கள்.

இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் பெற்றுக் கொள்வதில்லை. அதற்கு மாறாக ஒருபடி பச்சரிசி, தேங்காய், வெத்தளை – பாக்கு, பழம் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

What do you think?

இந்த தேர்தலில் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பதை மறந்துவிடுகள் – தேர்தல் வர உள்ளதால் மூன்று ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர்.

ஜெசி இளைஞர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு