ராஞ்சனா படத்தோட கதை, கேரக்டர்ஸ் எல்லாத்தையும் அப்படியே காப்பி தான் ‘தேரே இஸ்க் மே’
தனுஷ் நடிப்பில் வெளியான ஹிட் படமான ‘ராஞ்சனா’ (Raanjhanaa) விவகாரத்துல இப்போ ஒரு பெரிய பஞ்சாயத்து வெடிச்சிருக்கு.
2013-ல தனுஷ் ஹிந்தியில அறிமுகமான படம் தான் ‘ராஞ்சனா’.
இந்த வாரமே தனுஷ் நடிப்புல ‘தேரே இஸ்க் மே’ (Tere Ishk Mein) படமும் அதே டைரக்டர் இயக்கத்துல வந்துச்சு. இப்போ இதுக்கு நடுவுலதான் இந்த கோர்ட் மேட்டர் புகுந்திருக்கு.
‘ராஞ்சனா’ படத்தை தயாரிச்ச ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், மும்பை உயர் நீதிமன்றத்துல ஒரு மனு தாக்கல் பண்ணிருக்காங்க. “ராஞ்சனா படத்தோட கதை, அங்க இருந்த கேரக்டர்ஸ் எல்லாத்தையும் அப்படியே காப்பி அடிச்சுதான் ‘தேரே இஸ்க் மே’ படத்தை எடுத்துருக்காங்க.”
‘ராஞ்சனா’ படத்தோட டைட்டில், அதோட ஸ்டைல் எல்லாத்தையும் அனுமதியே இல்லாம விளம்பரத்துக்கு யூஸ் பண்ணிருக்காங்க. படத்தோட புரமோஷன், டீசர்னு எல்லா இடத்துலயும் எங்க அனுமதி இல்லாம பழைய ‘ராஞ்சனா’ படத்தைக் காட்டி பிசினஸ் பண்ணிருக்காங்க.
எங்களோட ‘ராஞ்சனா’ படத்தோட நல்ல பெயரை வச்சு சட்டவிரோதமா லாபம் பார்த்ததுக்காக, ஆனந்த் எல். ராய் மற்றும் அவரோட தயாரிப்பு நிறுவனம் ரூ. 84 கோடி நஷ்டஈடு தரணும்னு ஈராஸ் நிறுவனம் ஸ்ட்ராங்கா நிக்குறாங்க.
இதுக்கு ஆதாரமா படத்தோட போஸ்டர், டீசர், வீடியோ கிளிப்ஸ் எல்லாத்தையும் கோர்ட்ல ஒப்படைச்சிருக்காங்க. இந்த விறுவிறுப்பான கேஸ் நாளைக்கு (ஜனவரி 21) விசாரணைக்கு வருது.


