in

‘தி ஷேடோ’ஸ் எட்ஜ்’ Movie Review


Watch – YouTube Click

‘தி ஷேடோ’ஸ் எட்ஜ்’ Movie Review

 

ஜாக்கி ஜான் பெயரைத் தெரியாத சினிமா ரசிகர்களே இருக்க மாட்டாங்க! 90ஸ் கிட்ஸ்னா கண்டிப்பா அவருக்கு ஃபேன்ஸா இருப்பீங்க.

ரொம்ப நாளா அவரோட ஒரு நல்ல படத்துக்காகக் காத்துட்டு இருந்தவங்களுக்கு இந்த ‘தி ஷேடோ’ஸ் எட்ஜ்’ ஒரு ட்ரீட்! சிட்டிக்குள்ள திடீர்னு வந்த 4 இளைஞர்கள் ஒரு பேங்கைச் சூறையாடிட்டு போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவி தப்பிச்சிட்டாங்க.

அவங்களைத் துரத்தியும் போலீஸால பிடிக்க முடியலை. இவங்களுக்கு மாஸ்டர் மைண்ட் யாருன்னா, டோனி லிங்ங்கிற ஒருத்தர். எப்படியாவது இவங்களைப் பிடிக்கணும்னு, இப்போ இருக்கிற போலீஸ் டீம், நம்ம ஜாக்கியோட உதவியைக் கேட்குது. போலீஸ் கூட ஜாக்கி ஒரு டீம், திருடங்க கூட டோனி லிங் ஒரு டீம்னு…

இவங்க ரெண்டு பேருக்கும் இடையில நடக்குற ஆடு புலி ஆட்டம் தான் இந்தப் படம். படம் ஜாக்கி படம் தான். ஆனா, வில்லனா வர்ற டோனி லிங் நடிப்பால எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டிருக்காரு! படம் முழுக்க மிரட்டல் பெர்ஃபாமன்ஸ் தான்.

குறிப்பா, தன்னை வளர்த்தவங்களே தன்னைக் கொல்லப் பார்க்குறாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அவர் போடுற ஆட்டம்… இந்த வருஷத்தோட பெஸ்ட் நெகட்டிவ் கேரக்டர்!

இவருக்குத்தான் எல்லா விருதும் கொடுக்கணும்னு சொல்றாங்க.ஜாக்கி ஜான் படம்னா அதிரடி சாகசம் இருக்கும். ஆனா, அவரோட வயசைக் கருத்தில் வச்சு, டைரக்டர் (லேரி யாங்) சண்டைக் காட்சிகளைக் கொஞ்சம் குறைச்சுட்டு, திரைக்கதையோட வேகத்தை அதிகப்படுத்தியிருக்காரு.

இருந்தாலும், ரெண்டு இளைஞர்கள் கூட இரும்புக் கம்பியோட போடுற சண்டை, க்ளைமாக்ஸ்ல வில்லன் டோனி லிங் கூட குறுகலான ரூம்ல போடுற சண்டைன்னு ஜாக்கி ஃபேன்ஸுக்கு ஒரு சின்ன விருந்து வெச்சிருக்காங்க.

இந்த மாதிரி கதைக்கு ஏத்த மாதிரி, படத்துல நிறைய டெக்னாலஜியைப் பயன்படுத்தி பிரமிக்க வச்சிருக்காங்க. வில்லன் வீட்டுக்கு ஜாக்கியும், அவரோட மகளா இருக்கிற பெண்ணும் சோதனை போடுற இடம்லாம், டைட்டிலுக்கு ஏத்த மாதிரி எட்ஜ் ஆப் தி சீட் அனுபவத்தைக் கொடுக்குதாம்!

படத்துல ஹீரோயினா வர்ற ஸாங் கேரக்டர், இந்தக் காலத்துல ஒரு பொண்ணு எவ்வளவு தைரியமா இருக்கணும்னு காட்டுது. இசை, கேமரா, எடிட்டிங்னு எல்லாமே டாப் கிளாஸ்!

ஒரே ஒரு லாஜிக் மீறல் என்னன்னா, வில்லன் ஒரு கட்டத்துக்கு மேல, கத்தியை வச்சு 100 பேரைக் கொல்றது நம்ம ஊர் படங்களை மிஞ்சுற மாதிரி இருக்காம்.

What do you think?

சினிமாவுல ஒரு பெரிய தலைவலி ஓடிட்டு இருக்கு

நடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டா இருந்தவர் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன்