மயிலாடுதுறை காவேரிக்கரை பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலய திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறை காவேரிக்கரை திம்மாநாயக்கன் படித்துறை பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலய 8ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் குத்துவிளக்குடன் பங்கேற்று தாலி பாக்கியம் நிலைக்க வேண்டியும் உலக நன்மை வேண்டியும்,வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவேரிக்கரை திம்மாநாயக்கன் படித்துறை பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் தை இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பிரசன்ன சின்ன மாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து ஆலய முன்பு பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

உலக நன்மை வேண்டியும்,தாலி பாக்கியம் நிலைக்க வேண்டியும் இதில் பங்கேற்ற பெண்கள், குத்து விளக்கை அம்மனாக பாவித்து புஷ்பங்களால் அர்ச்சனை செய்தும் ஆலய அர்ச்சகர் கூறும் மந்திரங்களுக்கு ஏற்ப குங்குமத்தால் திருவிளக்கை பூஜை செய்தும் வழிபாடு செய்தனர்.
இதில் ஏராளமான பெண்கள் குத்துவிளக்குடன் பூஜையில் பங்கேற்று வழிபட்டுச் சென்றனர்.

