in

தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் வருகிறார்

தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் வருகிறார்..
திட்டங்களை அறிவிப்பார்..செயல்படுத்தாமல் கிடப்பில் போடுவார்

முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரிக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி வருகிறார். கடந்த 2016ல் காங்கிரஸ்- திமுக ஆட்சியில் 50 ஏக்கரில் சேதராப்பட்டில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து .

ரூ. 900 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு தேவையில்லை என்று ரத்து செய்து விட்டனர். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் அடிக்கல் நாட்ட வருகிறார். அதேபோல் உலக தரம் வாய்ந்த நீச்சல் குளம், ஸ்டேடியத்தில் செயற்கை ஓடுதளம் ஆகியவை எங்கள் ஆட்சியில் செயல்படுத்தி கொண்டு வந்த திட்டங்களை தற்போது பிரதமர் திறந்து வைக்கிறார்.

இது புதிய திட்டமல்ல. இது எங்களின் சாதனை. பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் எங்கள் சாதனை என பொய் சொல்லக் கூடாது என்றார்.தேர்தல் சமயத்தில் அறிவிப்புகளை பிரதமர் மோடி அறிவித்து கிடப்பில் போடுவது வழக்கம். மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் சேர்ப்பது உள்ளிட்ட விஷயங்களை பற்றி ஏதும் சொல்லவில்லை என்றும் நாராயணசாமி கூறினார்.

இந்தியா கூட்டணி வெற்றி முகத்தில் இருக்கிறது.. தோல்வி பயத்தில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் உள்ளது. இதனால் தான் பிரதமர், உள்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு வருகிறார்கள் என நாராயணசாமி தெரிவித்தார்

What do you think?

பெண்களை வெறும் ‘கவர்ச்சி பொருளா’ மட்டும் தான் பார்க்குறாங்க – டாப்சி பன்னு Open Talk

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 700 பேர் அதிமுகவில் இணைந்தனர்